6.8 C
New York
Monday, December 29, 2025

ஹெலி மூலம் சுற்றுலாவிகளை மீட்கும்பணி இன்னும் தொடரும்.

தெற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள Saas பள்ளத்தாக்கில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றும் நடவடிக்கை இன்றும் தொடரவுள்ளது.

கடும் மழையைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலச்சரிவினால், Saas பள்ளத்தாக்கில் இருந்து 2200 சுற்றுலாப் பயணிகள், வெளியேற முடியாத நிலை ஏற்பட்டது.

இவர்களில் 250 பேர் வெள்ளிக்கிழமையும்,  550 சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமையும் வெளியேற்றப்பட்டனர்.

நேற்றும் சுற்றுலாப் பயணிகளை வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஹெலிகொப்டர்களுக்கான அவர்கள் 4 மணிநேரம் காத்திருக்க வேண்டியிருந்தது.

இன்று காலை ஹெலிகொப்டர் மூலம் வெளியேற்றும் நடவடிக்கை  மீண்டும் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 8 மணி முதல் நண்பகல் வரை 300 பேர் வரை விமானம் மூலம் வெளியேற்றப்படுவார்கள்.

இந்தக் குறுகிய விமானப் பயணத்துக்கு ஒரு நபருக்கு 140  பிராங் கட்டணம் அறவிடப்படுகிறது.

மூலம்- Swissinfo

Related Articles

Latest Articles