21.6 C
New York
Friday, September 12, 2025

இயேசுவின் படத்துக்கு சுட்ட பசுமை கட்சியின் தலைவர் பதவி விலகல்.

ஜிஎல்பி கட்சியின் அரசியல்வாதியும், ஒப்பரேஷன் லிபரோவின் இணைத் தலைவருமான சனிஜா அமேதி,  கன்டோனின் பசுமை கட்சியின் தலைவர் பதவியை விட்டு விலக முடிவு செய்துள்ளார்.

குழந்தை இயேசு மற்றும் மரியன்னையின் உருவப்படத்தை நோக்கி துப்பாக்கியால் சுடும் படங்களை அவர் சமூக ஊடகத்தில் வெளியிட்டிருந்தார்.

இது பலத்த எதிர்ப்புகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர் தனது செயலுக்காக மன்னிப்புக் கோரினார்.

இந்த சர்ச்சைகளின் தொடர்ச்சியாக, கன்டோனல் ஜிஎல்பியின் தலைமைப் பொறுப்பில் இருந்து சனிஜா அமேதி பதவி விலகுவதாக இணைத் தலைவர் நோரா எர்ன்ஸ்ட் இன்று அறிவித்தார்.

இது ஒரு தனிப்பட்ட முடிவு, ஆனால் அவர் பதவி விலக கட்சி பரிந்துரைத்தது. ஒரு கட்சியாக, நாங்கள் இந்த முடிவை வரவேற்கிறோம் என்று எர்ன்ஸ்ட் கூறினார்.

“சமூக ஊடகங்களில் அவரது பதிவுகள், பசுமைக் கட்சியின்  மதிப்புகளை எந்த வகையிலும் பிரதிபலிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

அமேதி இணைத் தலைவராக இருக்கும் ஒப்பரேஷன் லிபரோ, மக்களின் நம்பிக்கை புண்படுத்தப்பட்டதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்,” என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளது.

மூலம் – Zueritoday

Related Articles

Latest Articles