22.5 C
New York
Thursday, June 19, 2025

சூரிச் நகர மையத்தில் இரு நாட்கள் தடைப்படவுள்ள போக்குவரத்து.

சூரிச் நகர மையத்தில் வரும் வெள்ளிக்கிழமை மாலை முதல் திங்கள் காலை வரை,  வீதி திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், Bürkliplatz – Quaibrücke இடையே நவம்பர் 8 ஆம் திகதி இரவு 11 மணி முதல் நவம்பர் 11 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் இருக்கும்.

Bürkliplatz மற்றும் Quaibrücke ஐ நெருங்கும்போதும் வெளியேறும்போதும் பெரும் போக்குவரத்து தாமதங்கள் மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படும் என்று சூரிச் நகரம் அறிவித்துள்ளது.

Enge இலிருந்து Bellevue நோக்கியும், Bellevue இலிருந்து Enge நோக்கியும், Bürkliplatz மற்றும் Quaibrücke மீது ஒரு பாதையில் மட்டும் போக்குவரத்து இயக்கப்படும்.

சாரதிகள் Bürkliplatz மற்றும் Quaibrücke ஐத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மூலம்- zueritoday

Related Articles

Latest Articles