26.5 C
New York
Thursday, September 11, 2025

வடக்கில் தமிழ்க் கட்சிகளுக்கு பேரிடி.

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் வடக்கில் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 6 ஆசனங்களில் 3 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றிய நிலையில் ஏனைய 3 ஆசனங்களை தமிழ் அரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, மருத்துவர் அர்ச்சுனாவின் சுயேட்சைக் குழு என்பன தலா ஒன்று என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளன.

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் கிளிநொச்சியில், தமிழரசுக் கட்சியும், ஊர்காவற்றுறையில் ஈடிபிபியும் வெற்றி பெற்ற நிலையில், ஏனைய 9 தொகுதிகளையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

இந்த தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஈபிடிபி, தமிழ் மக்கள் கூட்டணி, ஜனநாயக தமிழரசு கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகள் தோல்வியடைந்துள்ளன.

வன்னி தேர்தல் மாவட்டத்தில் முல்லைத்தீவு தொகுதியை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது. மன்னார், வவுனியா தொகுதிகளில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

இங்கு தேசிய மக்கள் சக்தி 2 ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் இலங்கை தொழிலாளர் கட்சி ஆகியன தலா 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளன.

அதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு 1 ஆசனம் கிடைத்துள்ளது.

Related Articles

Latest Articles