Köniz இல் நேற்று மாலை திடீர் மின்தடை ஏற்பட்டதால், சுமார் 2,000 மக்கள் மின்சாரம் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது.
நேற்று பிற்பகல் 4:24 மணிக்கு மின்சாரத் தடை ஏற்பட்டது.
பிற்பகல் 5:21 மணியளவில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின் விநியோகம் முற்றாக வழமைக்குத் திரும்பியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கேபிள் லைன் ஒன்றில் ஏற்பட்ட சேதமே திடீர் மின் தடைக்கு காரணமாகும்.
மூலம்.- watson.ch