26.7 C
New York
Thursday, September 11, 2025

A7 நெடுஞ்சாலையில் கார் எரிந்து நாசம்!

A7  நெடுஞ்சாலையில்  பயணம் செய்து கொண்டிருந்த கார் ஒன்று தீப்பிடித்து எரிந்து நாசமாகியது.

41 வயதான சாரதி ஒருவர் Kreuzlingen ஐ நோக்கி  A7  நெடுஞ்சாலை வழியாக சென்று கொண்டிருந்த போது,  காலை 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

காரின் இயந்திர சக்தி குறைவதைக் கண்டதும், சாரதி காரை விட்டு இறங்கினார். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிந்தது.

Kreuzlingen தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்த போதும் கார் முற்றாக எரிந்து நாசமாகியது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மூலம்.- watson.ch

Related Articles

Latest Articles